Home Featured நாடு மருத்துவமனை செலுத்திய இரத்தத்தில் எச்ஐவி – பாதிக்கப்பட்டவருக்கு 896,000 ரிங்கிட் நஷ்டஈடு!

மருத்துவமனை செலுத்திய இரத்தத்தில் எச்ஐவி – பாதிக்கப்பட்டவருக்கு 896,000 ரிங்கிட் நஷ்டஈடு!

837
0
SHARE
Ad

hivஈப்போ – நோயாளி ஒருவருக்கு எச்ஐவி கிருமி தொற்று உள்ள இரத்தத்தை செலுத்திவிட்ட குற்றத்திற்காக, அந்நபருக்கு 896,000 ரிங்கிட் இழப்பீடு கொடுக்க வேண்டும் என மருத்துவமனை ஒன்றிற்கு ஈப்போ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம், விபத்தில் சிக்கி ஈப்போவிலுள்ள பாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்நபருக்கு, கிண்டா மருத்துவ மையத்தில் இருந்து இரத்தம் பெறப்பட்டு செலுத்தப்பட்டது.

ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த இரத்தத்தில் எச்ஐவி இருந்ததால், அவர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு 27 வயதாகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கேம்சி மருத்துவமனை, இழப்பீடாக 750,000 ரிங்கிட் மற்றும் சிறப்பு இழப்பீடுகளாக 96,000 ரிங்கிட், அதோடு செலவுகள் 50,000 ரிங்கிட் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று ஈப்போ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.