ஈப்போ: கொவிட்-19 கண்காணிப்பில் இருந்த பெண் ஒருவர் அண்மையில் உணவகத்தில் உணவு உண்டுக் கொண்டிருந்தது பலரது கண்டனத்தை ஏற்படுத்தியது.
அப்பெண்மணி நேற்று கண்டறியப்பட்டு, தற்போது ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
72 வயதான அப்பெண்மணி 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட ஆணையிடப்பட்டதாக வட்டாரம் தெரிவித்தது.
“முதல் முறை பரிசோதிக்கப்பட்ட போது, அவர் எதிர்மறையான முடிவுகளைக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு இளஞ்சிவப்பு பட்டை ஒன்று மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்தது.
“கடந்த ஜூலை 6-ஆம் தேதி அப்பெண்மணி தமது குடும்பத்தினருடன் உணவு உண்ட புகைப்படம் இப்போதுதான் பரவலாகி உள்ளது. ” என்று அவர் கூறினார்.
இரண்டாவது பரிசோதனையின் போது அவர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை 17 அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“அப்பெண்மனி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது மகனும் இத்தொற்றுக்கு நேர்மறையான அறிகுறிகளைக் கொண்டிருந்தார்.
“ஆயினும், அவர்களால் பிறருக்கு தொற்று ஏற்படுவது குறைவான சாத்தியமே என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேரு ஹைட்ஸ் பகுதியைச் சேர்ந்த அப்பெண், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பண்டார் மேரு ராயாவில் தனது உணவை உட்கொண்டதாக செய்திகள் வெளியாகின.