பெங்களூர் – பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை உள்ளிட்ட சகல வசதிகள் செய்யப்பட்டது உண்மை தான் என கர்நாடக சட்டமன்ற பொதுக்கணக்குக் குழு கூட்டத்தில் கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேகரிக், டிஜிஜி ரேவண்ணா ஆகியோர் ஒப்புக் கொண்டனர்.
சிறை அதிகாரி சத்யநாராயண ராவ், 2 கோடி பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு சலுகைகள் வழங்குவதாக டிஜிஜி ரூபா குற்றம் சாட்டிய பிறகு, அப்பதவியில் இருந்து சத்யநாராயண ராவ், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டார்.அவருக்குப் பதிலாக மேகரிக் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சட்டமன்ற பொதுக்கணக்குக் குழு கூட்டத்தில் மேகரிக்கும், ரேவண்ணாவும் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பது உண்மை தான் என்பதை ஒப்புக் கொண்டனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கர்நாடக அரசு விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை செய்து வருகின்றது.