Home Featured இந்தியா சிறை வசதிகளுக்கு சசிகலா 2 கோடி இலஞ்சமா?

சிறை வசதிகளுக்கு சசிகலா 2 கோடி இலஞ்சமா?

1382
0
SHARE
Ad

sasikalaபெங்களூரு – இங்குள்ள பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் வழங்குவதற்காக அந்த சிறைச்சாலையின் இயக்குநருக்கு 2 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டதாக கர்நாடக காவல் துறையின் உயர் அதிகாரியான ரூபா என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட சிறைச்சாலை இயக்குநர் நான் யாரிடமிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும், ஒரு பிஸ்கெட் கூட நான் சிறைச்சாலை கைதிகளிடம் இருந்து பெறுவதில்லை என்றும் உறுதியுடன் மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசாங்கத் தரப்பு பேச்சாளர் கருத்துரைக்கையில், மாநில அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாகக் கருதுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தொலைக்காட்சி ஊடகங்களும் இது குறித்து விவாதங்களை நடத்தி வருகின்றன.