Home நாடு பேரரசர் பிறந்தநாள் ஜூலையிலிருந்து செப்டம்பருக்கு மாற்றம்!

பேரரசர் பிறந்தநாள் ஜூலையிலிருந்து செப்டம்பருக்கு மாற்றம்!

1247
0
SHARE
Ad

najib-sultan-muhammad-new-agongகோலாலம்பூர் – பேரரசர் சுல்தான் மொகமட் V-ன் பிறந்தநாளான ஜூலை 29-ம் தேதியை, அரசாங்கம் செப்டம்பர் 9-ம் தேதிக்கு அதிகாரப்பூர்வமாக நகர்த்தி வைத்தது.

இது குறித்து பிரதமர் துறை இலாகா இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பேரரசர் சுல்தான் முகமது V-ன் 2017-ம் ஆண்டிற்கான பிறந்தநாளான ஜூலை 29-ம் தேதி, சனிக்கிழமையை, செப்டம்பர் 9-ம் தேதி, சனிக்கிழமைக்கு அதிகாரப்பூர்வமாக நகர்த்துகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

2017 முதல் 2021 வரையிலான அடுத்த 5 ஆண்டு கால சுல்தான் முகமது V ஆட்சியில் இந்த திருத்தம் கடைபிடிக்கப்படும் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice