Home இந்தியா அதிபர் தேர்தல்: மீராகுமார் புதிய சாதனை!

அதிபர் தேர்தல்: மீராகுமார் புதிய சாதனை!

873
0
SHARE
Ad

meira_kumar-ex-speaker-indian-president-candidateபுதுடெல்லி – இந்திய அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட, தோல்வியடைந்தவர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற வகையில் கடந்த 50 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமார்.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகளின் சார்பில் மீராகுமார் போட்டியிட்டார்.

அதில், மொத்தம் 10.69 லட்சம் வாக்குகளில் 3.67 லட்சம் வாக்குகளை மீராகுமார் பெற்றார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம், அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற 50 ஆண்டு கால சாதனையை மீராகுமார் முறியடித்தார்.

இதற்கு முன்பு, 1967-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சுப்பாராவ் 3.63 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்ததே சாதனையாக இருந்து வந்தது.

தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.