Home இந்தியா ஜூலை 17 இந்திய அதிபர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்!

ஜூலை 17 இந்திய அதிபர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்!

1105
0
SHARE
Ad

Indiapresidentialelection2017புதுடெல்லி – இந்தியாவின் 14-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது.

இத்தேர்தலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவிருக்கின்றனர்.

நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறும்.

#TamilSchoolmychoice

அதிபர் பதவிக்கு பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார்.

தற்போதைய அதிபர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியோடு நிறைவடைவதையடுத்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.