Home Featured தொழில் நுட்பம் பினாங்கு மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

பினாங்கு மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

1533
0
SHARE
Ad

titian digital-penang-15072017நிபோங் திபால் – தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் கீழ், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூகக் கல்வி அறவாரியம் மற்றும் மலேசிய உத்தமம் அமைப்பு இணை ஏற்பாட்டில், 2017-ஆம் ஆண்டுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் மாநிலம் வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்பில் நேற்று சனிக்கிழமை (ஜூலை 15) நிபோங் திபால் தேசிய வகை தமிழ்ப் பள்ளியில் பினாங்கு மாநிலப் பள்ளிகளுக்கான போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பினாங்கு மாநிலத்திலுள்ள 25 தமிழ்ப் பள்ளிகளிலிருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை மேலே படத்தில் காணலாம்.