Home Featured கலையுலகம் பிக் பாஸ்: கமல் வார்த்தைகளால் கவலைப்பட்ட காயத்ரி!

பிக் பாஸ்: கமல் வார்த்தைகளால் கவலைப்பட்ட காயத்ரி!

1680
0
SHARE
Ad

gayathri-raguram-big bossசென்னை – நேற்று சனிக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக் காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் கலந்து கொண்ட கமல்ஹாசன், ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அவ்வாறு, காயத்ரியிடம் (படம்) பேசும்போது, உங்களின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவது போல் தெரிகிறதே எனக் கூறிவிட்டார்.

அதன் பிறகு, நிகழ்ச்சிக்கு கமல் இடைவேளை கொடுத்தார். அந்த இடைவேளையின்போது, காயத்ரி புலம்பித் தீர்த்துவிட்டார்.

“நான்தான் அடுத்து வெளியேற்றப்படப் போகிறேன் என்பதை கமல் மறைமுகமாகச் சொல்லிவிட்டார். இது இரண்டாவது வாரமாக அவர் என்னைப் பார்த்துச் சொல்கிறார். எனவே, என்னை ஏதோ தப்பாக மக்களிடையே காட்டுகிறார்கள் என நினைக்கிறேன். அவர்களாகவே வெளியேற்றுவதற்கு முன்பாக நானே வெளியேறப் போகிறேன்” என்று காயத்ரி மற்றவர்களிடம் கலக்கத்துடன் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துநரின் தனியறைக்குச் சென்று – அதாவது கொன்பெஷன்ஸ் (சுயசெய்கைகளை ஒப்புக் கொள்ளும்) அறைக்குச் சென்று – காயத்ரி பேசும்போது அவரது உடலில் கேல்சியம் ஒரே சீராக இருக்கிறது என பிக் பாஸ் சொல்ல – ஆனால் காயத்ரியோ வெளியே வந்து எனக்கு கேல்சியம் குறைவாக இருக்கிறது என பொய் சொன்ன காட்சிகளை கமல் மீண்டும் ஒளிபரப்பினார்.

ஆனால், காயத்ரியோ ‘சீராக இருக்கிறது’ என்றால் என்ன அர்த்தம் என்பது எனக்குத் தெரியவில்லை என்றும் ‘கம்மியாக இருப்பதுதான் என நான் நினைத்து விட்டேன் என்றும் சிரித்துக் கொண்டே சமாளித்தார்.

நேற்று சனிக்கிழமை தமிழகத் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சுவாரசியமான இந்தக் காட்சிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு அஸ்ட்ரோ 224 அலைவரிசையில் மலேசிய இரசிகர்கள் காணலாம்.

-செல்லியல் தொகுப்பு