Home Featured இந்தியா அமர்நாத் பயணிகள் பேருந்து கவிழ்ந்து 16 பேர் பலி

அமர்நாத் பயணிகள் பேருந்து கவிழ்ந்து 16 பேர் பலி

1629
0
SHARE
Ad

Srinagar-location-புதுடில்லி – அமர்நாத் பயணம் மேற்கொண்ட பயணிகளின் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் இதுவரை 16 பேர் உயிர்ப் பலியாகி இருப்பதோடு, மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்ததால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த பேருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. இராணுவ முகாம் ஒன்றுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதால், உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளத்தாக்கில் விழுந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேலே தூக்கிக் கொண்டுவரப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.