Home Featured கலையுலகம் பிக் பாஸ்: நடிகை ஆர்த்தி கணேஷ் வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ்: நடிகை ஆர்த்தி கணேஷ் வெளியேற்றப்பட்டார்!

2418
0
SHARE
Ad

aarthi ganesh-சென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் முதல் கட்டமாக நடிகர் வையாபுரி இரசிகர்களால் காப்பாற்றப்பட்டார் என கமல்ஹாசன் அறிவித்தார்.

அதன் பின்னர் ஜூலியானாவை அவரது பொருட்கள் அடங்கிய பெட்டியை எடுத்து வருமாறு கமல்ஹாசன் பணித்தார். அதே நேரத்தில் நடிகை ஆர்த்தியையும் அவரது பெட்டியை எடுத்து வந்து விடுங்கள் எனக் கமல்ஹாசன் கூறினார்.

அதன்பின்னர் ஜூலியானா, ஆர்த்தி இருவரில் யார் ஒருவரை வெளியேற்ற இரசிகர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்ற பரபரப்பு கூடியது.

#TamilSchoolmychoice

தொடர்ந்து இருவருமே வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என்பது போன்ற தோற்றத்தை கமல் ஏற்படுத்தினார். இருவருமே தங்களின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபின்னர், வெளியேறும் தருவாயில் பிக்பாஸ் மீண்டும் அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தார்.

அதன்பின்னர் கமல்ஹாசன் வெளியேற்றப்படுபவரின் பெயர் கொண்ட உறையைத் திறந்து பெயரைக் காட்டினார். அதில் ஆர்த்தி என்ற பெயர் இருக்க – ஆர்த்தி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.