புதுடெல்லி – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் இறக்கவில்லை என பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளரான ஜேபிபி மோர் கூறியிருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறை இரகசிய ஆவணங்களில் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய நேதாஜி, கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி நடந்த விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகின்றது.
நேதாஜி மாயமானது தொடர்பாக இந்திய அரசு கடந்த 1956-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஷாநவாஸ் கமிட்டி மற்றும் 1970-ல் அமைக்கப்பட்ட கோஸ்லா கமிட்டி ஆகியவை, அன்று ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்த தைபேயில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தாகக் கூறின என்பது குறிப்பிடத்தக்கது.