Home One Line P2 கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது!

கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது!

967
0
SHARE
Ad

புது டில்லி: ஜம்மு நகரத்தை நோக்கி இரண்டு கிளர்ச்சியாளர்களை ஓட்டிச் சென்றதைக் கண்டறிந்த ஒரு மூத்த காவல் துறை அதிகாரி, காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.

கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி காவல் துறைத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய தெற்கு காஷ்மீரில் சனிக்கிழமை இரவு வேகமாகச் சென்ற காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து,   நீண்டகாலமாக பணியாற்றும் துணை காவல் அதிகாரி டாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டதாக காவல் துறைத் தலைவர் விஜய்குமார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த கைதினை ஒரு பெரிய நடவடிக்கை என்று விஜய்குமார் தெரிவித்துள்ளார். டாவிந்தர் சிங்குடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நாவீட் முஷ்டாக் பாபா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் காஷ்மீரின் மிகப்பெரிய கிளர்ச்சிக் குழுவான ஹிஸ்புல் முஜாஹிடின் உயர்மட்ட தளபதியாவார்.

ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகியவற்றின் கீழ், டாவிந்தர் சிங் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்என்று விஜய்குமார் கூறினார்.

இது ஒரு முக்கியமான வழக்கு மற்றும் எந்த கசிவுகளையும் நாங்கள் விரும்பவில்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.

டாவிந்தர் சிங் ஒரு கிளர்ச்சியாளராக கருதப்படுவார் என்றும் அனைத்து உளவு அமைப்புகளும் கூட்டாக அவரை விசாரிப்பர் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு 11 ஆப்பிள் வணிகர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களைக் கொன்றதில் முஷ்டாக் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.