Home One Line P2 பிரணாப் முகர்ஜி உடல் நிலை மோசமடைந்தது

பிரணாப் முகர்ஜி உடல் நிலை மோசமடைந்தது

1092
0
SHARE
Ad

புது டில்லி: அண்மையில் உடல் நலக் குறைவினால் டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

மூளையில் உள்ள கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்து கோமா எனப்படும் மயக்க நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். சுவாசக் கருவியின் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக அவரது குடும்பத்தினரும் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

எனினும் இராணுவ மருத்துவமனை ஆகக் கடைசியாக வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பின்னடைவைக் கண்டு மோசமடைந்திருக்கிறது.