Home One Line P2 பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் மாற்றம் இல்லை, மகள் டுவிட்டரில் உருக்கமாகப் பதிவு

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் மாற்றம் இல்லை, மகள் டுவிட்டரில் உருக்கமாகப் பதிவு

738
0
SHARE
Ad

புது டில்லி: அண்மையில் உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவரது மகள் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவு மற்றும் கொவிட்19 தொற்று காரணமாக டில்லி இராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை தெரிவித்திருந்தது. அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தற்போது சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவரது மகள், ஷர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தை குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், “கடவுளே என் தந்தைக்கு எது சிறந்ததோ அதை செய். அதே நேரத்தில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றுபோலவே அணுகும் சக்தியையும் எனக்கு வழங்கிடு. அனைவரது அன்புக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.