Home One Line P2 ‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது?’- சண்முகம்

‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது?’- சண்முகம்

577
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் டாக்டர் மகாதீர் முகமட்டின் கவிதை பாணியில் எழுதப்பட்ட இரண்டு வரி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று தமது புதிய கட்சியின் பெயரை முகநூலில் அறிவிக்கும் போது, மகாதீர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவை மேற்கோள்காட்டி, சண்முகம் “அவர்கள் இன்னும் மலாய் அடையாளத்துடன் இருக்கிறார்களா?” என்ற வரியை குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“டாக்டர் மகாதீர் எந்த நாட்டினைக் குறிப்பிடுகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் கவிதை பாணியில் எழுதப்பட்ட 36 வரிகளில் இது இடம்பெற்றுள்ளது. அவர் தனது புதிய அரசியல் கட்சியான பார்ட்டி பெஜுவாங் தானா ஆயர் (பெஜுவாங்) பெயரை வெளிப்படுத்தும் போது இந்த கூற்றினை வெளிப்படுத்தினார்.

டாக்டர் மகாதீரின் அறிக்கையில் சண்முகம் குறிப்பிட்ட இரண்டு வரிகள்:

“பக்கத்தில் இருக்கும் மலாய்க்காரர்களைப் பாருங்கள்”

“அவர்கள் இன்னும் மலாய் அடையாளத்துடன் இருக்கிறார்களா?”

ஆயினும், டாக்டர் மகாதீர், அவர் குறிப்பிடும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவில்லை.

1965- இல், சிங்கப்பூர் மலேசியாவை விட்டு வெளியேறியது.

70 விழுக்காட்டிற்கும் அதிகமான சீனர்களை சிங்கப்பூர் கொண்டிருக்கிறது. மலாய்க்காரர்கள் 15 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள். ஆயினும், அங்கு மலாய்க்காரர்கள் இன்னும் அந்நாட்டின் அசல் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.