Home One Line P1 மகாதீரின் புதிய கட்சி ‘பெஜுவாங்’

மகாதீரின் புதிய கட்சி ‘பெஜுவாங்’

664
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டின் புதிய கட்சி “பெஜுவாங்” என்று அறியப்படுகிறது. இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி மகாதீர் ஒரு புதிய கட்சியை அமைப்பார் என்று அறிவித்திருந்தார். இதற்கு முன்னர் நிறுவப்பட்ட பெர்சாத்து போன்ற மலாய்க்கார மக்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இது இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில், “பார்டி பாரு – பெஜுவாங்”, ஊழல் நாட்டையும், மலாய்க்காரர்களையும் அழிக்கும் என்பதை உணர்ந்ததன் அடிப்படையில் இக்கட்சி நிறுவப்பட்டது என்று மகாதீர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னர் உருவாக்கப்பட்ட கட்சியான பெர்சாத்து ” எதிரிகளை காப்பாற்றுவதற்காக கைப்பற்றப்பட்டது” என்று அவர் கூறினார்.

“பெர்சாத்து ஊழல் அரசியல்வாதிகளை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. இப்போது அவர்களை பாதுகாக்கிறது ”என்று அவர் கூறினார்.