நியூசிலாந்து: கொவிட்19 தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக நியூசிலாந்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை 14 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆக்லாந்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்ப உறுப்பினர்களின் கண்டுபிடிப்பு மூன்று மாதங்களுக்கும் மேலாக கொவிட்19 சம்பவத்தைப் பதிவு செய்யாத ஒரு நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நெருக்கடியை அரசாங்கம் கையாண்டது குறித்து சில விமர்சனங்கள் எழத் தொடங்கி உள்ளது.
சமூகத்தில் 14 புதிய சம்பவங்கள் இருப்பதாக நியூசிலாந்து வியாழக்கிழமை அறிவித்தது. மொத்த செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கையை 36- ஆகக் கொண்டு வந்தது.
“இருக்கும் நிலைமையின் தீவிரத்தை நாம் காணலாம்” என்று பிரதமர் ஜசிண்டா அடெர்ன் தொலைக்காட்சி ஊடக மாநாட்டில் கூறினார்.
“இது அவசர நிலை, ஆனால் அமைதியான மற்றும் முறையான முறையில் கையாளப்படுகிறது.” என்று அவர் கூறினார்.
அடெர்ன் புதன்கிழமை ஆக்லாந்தில் இறுக்கமான கட்டுப்பாடுகளையும், நாட்டின் பிற பகுதிகளிலும் கூடல் இடைவெளி நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்தார்.