Home One Line P1 புதிய காவல் துறைத் துணைத் தலைவராக அக்ரில் சானி நியமனம்

புதிய காவல் துறைத் துணைத் தலைவராக அக்ரில் சானி நியமனம்

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு இயக்குநர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி இன்று முதல்  காவல் துறைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நாளை தொடங்கி ஓய்வு பெற இருக்கும் டத்தோ மஸ்லான் மன்சோருக்கு பதிலாக அக்ரில் சானி இந்த பதவியை வகிப்பார்.

மலேசிய காவல் துறையின் இரண்டாம் உயரிய பதவியை ஒப்படைக்கும், நியமிக்கும் விழா செராசில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

அக்ரில் சானிக்கு காவல் துறையில் விரிவான அனுபவம் உள்ளது. வணிக குற்றவியல், புலனாய்வுத் துறை, வளங்கள் துறை மற்றும் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளை புக்கிட் அமானில் வழிநடத்தியுள்ளார்.