இராணுவ மருத்துவமனையின் வட்டாரங்களின்படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில மணிநேரங்கள் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் அவர் கொவிட் தொற்றுக்கு ஆளாகாமல் இருந்திருந்தால், சுவாசக் கருவி உதவி தேவைப்பட்டிருக்காது என்று தெரிவித்திருந்தது.
84 வயதான முகர்ஜி திங்களன்று தமக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும், கொவிட்19 பரிசோதனை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.
வேறு சில காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, அங்கு கொவிட்19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதாகத் தெரிவித்தார்.