காயத்ரியின் கருணையைப் பெற அடிக்கடி நிறம் மாறும் குணம், எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து காரியம் சாதிக்கும் நாடகத்தன்மை, தங்கையென பாசத்துடன் நடந்து கொண்ட பரணியை கைவிட்ட செயல், தற்போது ஓவியாவை மற்ற போட்டியாளர்களிடத்தில் சிக்க வைத்த சதி என ஜூலியின் அனைத்து செயல்பாடுகளும் பார்வையாளர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வருகின்றது.
பேஸ்புக், டுவிட்டர் என நட்பு ஊடகங்களில் பிரபல நடிகர் நடிகைகள் உட்பட பலரும் ஜூலியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனால் ஜல்லிக்கட்டில் சம்பாதித்த நற்பெயர் அனைத்தையும் பிக்பாசில் வெற்றி பெறுவதற்காக தொலைத்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து நிற்கிறார் ஜூலி.
அடுத்த வெளியேற்றப் பட்டியலில் ஜூலி இடம்பிடிக்கும் பட்சத்தில் நிச்சயமாக வெளியேற்றப்படுவார் என்பதே மக்களின் கருத்தாக் இருக்கிறது.