Home Featured நாடு கட்டாய சூழலின் காரணமாகவே இர்வானுக்குப் பதிலாக இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார் – வால் ஸ்ட்ரீட் கருத்து!

கட்டாய சூழலின் காரணமாகவே இர்வானுக்குப் பதிலாக இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார் – வால் ஸ்ட்ரீட் கருத்து!

739
0
SHARE
Ad

Muhammad Ibrahimகோலாலம்பூர் – பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக நேற்று முகமட் இப்ராகிம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உதவியாளர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அகமட் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், இந்த புதிய நியமனம், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை, மலேசியாவைப் பற்றி வெளியிடும் செய்திகள் முற்றிலும் பொய் என மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

காரணம், பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக நிதியமைச்சைச் சேர்ந்த கருவூலத் தலைவர் இர்வான் சிரெகார் அப்துல்லா தான் நியமிக்கப்படுவார் என்று ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தனது முந்தைய செய்திகளில் கூறிவந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தெங்கு ஷரிபுடினுக்குப் பதிலளிக்கும் விதமாக மலேசியாகினி இணையதளத்திற்கு வால் ஸ்ட்ரீட் அளித்துள்ள தகவலில், “இந்த விவகாரத்தில் நாங்கள் வெளியிட்ட நடுநிலைமையான மற்றும் துல்லியமான செய்தியை இப்போதும் தற்காக்கின்றோம். மலேசியாவில் நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து ஆராய்ந்து செய்திகள் வெளியிடக் கடமைப்பட்டுள்ளோம்” என்று பதிப்பாளர் டோ ஜோன்ஸ் மூலமாக வால் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

மேலும், இர்வானுக்குப் பதிலாக முகமட் இப்ராகிம்மை நியமனம் செய்யும் கட்டாய சூழலுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுவிட்டது என்றும் வால் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.