மார்ச் 29- பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா. இவர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம்சரண் நடித்த மகதீரா படம் தமிழ், தெலுங்கில் வெளியானது.
தற்போது தெலுங்கில் தயாராகும் ‘தூபன்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை ‘ஜன்சீர்’ என்ற பெயரில் இந்தியிலும் வெளியிடுகின்றனர்.
ஏற்கனவே 1973-ல் அமிதாப்பச்சன் நடித்து வெளியானது ஜன்சீர் படத்தின் மறுப்பதிவு இப்படம். அப்படத்தை பிரகாஷ் நகரா தயாரித்து இருந்தார்.
அவரது மகன்கள் புனீத், சுமீத் ஆகியோர் ராம்சரண் நடிக்கும் படத்துக்கு தடைகோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மறுப்பதிவு உரிமை வழங்கியதில் தங்களது சகோதரர் அமீத் மோசடி செய்து விட்டதாகவும் எனவே படத்தை நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சரண் படத்துக்கு தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் திரை முன்னோட்ட காட்சிகள் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.