Home இயக்கங்கள் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு வழிக்காட்டி கருத்தரங்கம்

எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு வழிக்காட்டி கருத்தரங்கம்

655
0
SHARE
Ad

stpmஜோகூர்பாரு, மார்ச்.29- எதிர்வரும் 31.3.2013 தேதி ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் காலை 9.00மணிக்கு எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு இலவச வழிக்காட்டி கருத்தரங்கம்  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வினை ஜோகூர் கல்வி சமூகநல ஆய்வு வாரியம், மஇகா புத்ரா, மஇகா தமிழ்மொழிக் கழகம் மற்றும் தொழில் நுட்ப பல்கலைகழக இந்து மாணவர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த வழிக்காட்டி கருத்தரங்கை  ஏற்பாடு செய்துள்ளன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை பெற்ற போதிலும் தொடர்ந்து என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்த ஆலோசனை வழிக்காட்டி பேருதவியாக அமையும்.

#TamilSchoolmychoice

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு எஸ்.இளேந்திரன் கேட்டுக் கொண்டார்.

மேல் விவரங்களுக்கு எஸ்.ராஜேந்திரன்  012-4481654 மற்றும் எம்.கோவர்த்தனுடன் 014-9100107 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.