Home நாடு தமிழ்ப் பள்ளிகளுக்கான அரசின் அங்கீகாரம் வார்த்தை ஜாலமோ நாடகமோ அல்ல- தேவமணி

தமிழ்ப் பள்ளிகளுக்கான அரசின் அங்கீகாரம் வார்த்தை ஜாலமோ நாடகமோ அல்ல- தேவமணி

511
0
SHARE
Ad

Datuk-SK-Devamanyபுத்ராஜெயா, மாரச் 29 –  புதிதாகக் கட்டுவதற்கு 7 தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதி வெறும் வெற்று வாக்குறுதியல்ல என்றும் மாறாக இந்திய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி என்றும் பிரதமர்துறை துணையமைச்சர் எஸ். கே.தேவமணி பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

லூனாஸில் உள்ள பாயாபெசார் தமிழ்பள்ளி,தாமான் கெலாடி சுங்கை பட்டாணி; லாடாங் ஹேவுட் சுங்கை சிப்புட்;  தாமான் செந்தோசா ,கிள்ளான்; பி.ஜெ.எஸ்1. பெட்டாலிங் ஜெயா; பண்டார் மக்கோத்தா, செராஸ்; பண்டார் ஸ்ரீஅலாம் மாசாய், ஜொகூர் ஆகிய பள்ளிகளே அப்பள்ளிகள் என்றும், உறுதியளித்தபடி அவை கட்டப்படும் என்றும் துணை அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பிரதமர் நஜீப் இந்தியர்களின் நம்பிக்கையையும், ஆவலையும் பூர்த்தி செய்யாமல் அவர்களை கைவிடமாட்டார். இதுவரை தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒருபோதும் தவறியதில்லை என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

லாடாங் ஹேவுட், சுங்கை சிப்புட் தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல்நாட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை துணைக் கல்வியமைச்சர் டாக்டர் முகமட் புவாட் ஷர்காசியால் அதிகாரப்பூர்வமாக துவங்கி வைக்கப்படும் என்றும் அப்பள்ளி 2.4  ஹெக்டரில் கட்டப்படும்  என்றும் தேவமணி தெரிவித்தார்.

லூனாஸில் உள்ள பாயாபெசார் தமிழ்பள்ளி 10 மில்லியன் செலவில் கட்டுமானப்பணி தொடர்வதாகவும் அடுத்த வருட மத்தியில் கட்டி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பள்ளிகளுக்கும் வேலைகள் ஆரம்பமாகும் என்று கூறினார்.

கடந்த 2009லிருந்து தேசிய முன்னணி அரசு தமிழ்பள்ளிகளுக்கு 540 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியதைக் குறிப்பிட்ட அவர்,  தமிழ்ப் பள்ளிகளுக்கு கூடுதல் இடம் மற்றும் புனரமைப்புக்கு பிரதமர் நஜீப் 2013 பட்ஜெட்டில் 100 மில்லியன் கூடுதல் தொகை ஒதுக்கியுள்ளதையும் குறிப்பிட்டார்.