Home இந்தியா சென்னையில் உலகத் தமிழர் திருநாள் விழா – மலேசியர்களுக்கு அழைப்பு

சென்னையில் உலகத் தமிழர் திருநாள் விழா – மலேசியர்களுக்கு அழைப்பு

1376
0
SHARE
Ad
செல்வகுமார் – உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் தலைவர்

சென்னை – 5-ஆம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளியினர் ஒன்றுகூடல்-வணிகப் பரிமாற்றம் (பிஸினஸ் டூ பிஸினஸ்) தமிழ்நாட்டின் சென்னையில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலை கலாச்சாரம், இசைத்திருவிழா, ஆடைத் திருவிழா, வணிக சந்திப்புகள் போன்ற அங்கங்கள் இடம் பெற உள்ளன.

அவ்விழாவில் தமிழ் ஆர்வலர்கள் தமிழரின் வரலாறுகளை ஆவணப்படுத்தும் விதமாக விழா மலரும் இணைய மலரும் வெளியீடு காண உள்ளன. மேலும் உலகத் தமிழர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் உலகம் எங்கிலும் இருந்து கலந்துகொள்ள உள்ளனர்.

இவ்விழாவில் மலேசியாவில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 25 சட்டமன்ற உறுப்பினர்களும், மாநில, மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மேலும் அயலக தமிழ் சட்டமன்ற, நாடாளுமன்றம் மற்றும் மேலவை (செனட்) உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் வலிமையான தமிழ் சமுதாயம் உருவாகவும், கல்வி பொருளாதாரத்தில் தமிழர்கள் உயர்நிலை அடையவும் கருத்தாக்கம் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

மேலும் கவியரங்கத்தில் அனைத்து நாட்டு பிரதிநிதிகள் பங்கு பெறவும் உலகத் தமிழ் ஊடகவியலாளர்கள்  ஒருங்கிணையவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் தமிழர்கள் புதிய அத்தியாயத்தை உருவாக்குவார்கள் என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தொடர்புக்கு +60166167708, gotoorganisation@gmail.com