Home வாழ் நலம் தாய்ப்பாலின் மகத்துவம்

தாய்ப்பாலின் மகத்துவம்

576
0
SHARE
Ad

mom-n-childகோலாலம்பூர், மார்ச் 31-பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால் தான்.

அதற்கு இணையான உணவு வேறு எதுவுமே கிடையாது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தாலும் அரைமணி நேரத்திற்குள் அதற்கு தாய்ப்பாலை கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும்,நோய் எதிர்ப்பு சக்திகளும் தாய்ப்பாலிலேயே கிடைத்து விடுகிறது.

#TamilSchoolmychoice

குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை கூட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.

அதனால் குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக இருப்பார்களே தவிர குறை ஒன்றும் ஏற்படாது. அவ்வாறு தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடாலோ, தொற்று நோயாலோ மரணம் ஏற்படாது. அதே நேரத்தில் தாய்ப்பாலை குறைவாக குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த வகையில் மரணம் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

குழந்தை பிறந்தவுடன் தண்ணீர், காய்ச்சிய நீர், சர்க்கரை தண்ணீர்,தேன், விளக்கெண்ணெய், கழுதைப்பால், ஆட்டுப்பால் கொடுப்பது கழுதை ரத்தத்தை நாக்கில் தடவுவது, தங்கத்தால் நாக்கை தடவுவது போன்ற செயல்களை எந்த காரணத்திற்காகவும் செய்யவே கூடாது.   அவ்வாறு செய்வது தொற்று நோய் கிருமிகளை நாமே குழந்தையின் உடலுக்குள் செலுத்துவது  போன்றது.

தாய்மார்களிடம் இருந்தது தாய்ப்பாலை விலை கொடுத்து வாங்கி அதை பாதுகாத்து தேவை உள்ளவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

பால்கொடுக்க இயலாதவர்கள் குழந்தைக்கு பால்கொடுக்க மறுப்பவர்களும் இந்த பாலை விலை கொடுத்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தற்போது தாய்ப்பால் வங்கியே தாயாகி விட்டது.