Home கலை உலகம் “வெற்றிப் பெறாத படங்களும் வெற்றி விழா கொண்டாடுகின்றன”- ஐஸ்வர்யா ராஜேஷ்

“வெற்றிப் பெறாத படங்களும் வெற்றி விழா கொண்டாடுகின்றன”- ஐஸ்வர்யா ராஜேஷ்

1599
0
SHARE
Ad

சென்னை: சமீபத்தில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கனா’. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த, இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்தியராஜ் நடித்திருந்தனர்.

இதற்கிடையே, இத்திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. அந்த விழாவில் அவர்,வெற்றிப் பெறாத படங்களும் தற்போது வெற்றி விழாக்களை கொண்டாடி வருகின்றன எனக் கூறியது சர்ச்சையை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து, பல கருத்துகளும், சர்ச்சைகளும் திரையுலகினர் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், தாம் யாரையும் குறிப்பிட்டு அவ்வாறு சொல்லவில்லையென்றும், விளையாட்டுத்தனமாகப் பேசிய வார்த்தைகள் அவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

எல்லா படங்களும் வெற்றிப் பெற வேண்டும் என்பதே அவரது எண்ணம் எனக் கூறி, தமது கூற்றானது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.