Home நாடு ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை பாதிக்கும் கிரிமியா ரத்து விவகாரத்தை மறுபரிசீலினை செய்வீர் – மருத்துவர்கள் கோரிக்கை

ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை பாதிக்கும் கிரிமியா ரத்து விவகாரத்தை மறுபரிசீலினை செய்வீர் – மருத்துவர்கள் கோரிக்கை

569
0
SHARE
Ad

Liow-Tiong-Lai-Sliderகோலாலம்பூர், ஏப் 3- உக்ரெய்ன் நாட்டில் இயங்கி வரும் கிரிமியா பல்கலைக்கழக மருத்துவப் பாடத்திட்டத்திற்கு இனி அங்கீகாரம் இல்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ லியோங் (படம்) அண்மையில் அறிவித்தார்.

இந்த முடிவு ஓர் இனத்தை குறிப்பாக இந்தியர்களை புறக்கணிக்கும் முடிவு என்று பல மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.காரணம் இந்த கிரிமியா பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாவர்.

ஆனால் லியோங் இந்த அரசாங்க அரசியல் நோக்கமோ, இனத்தை புறக்கணிக்கும் நோக்கமோ இல்லாதது என்று விளக்கம் அளித்திருந்தார்.

#TamilSchoolmychoice

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும், நிர்வாகத்திலும் பல குளறுபடிகள் இருப்பதால் சுகாதார அமைச்சு இந்த முடிவை எடுத்திருப்பதாக லியோங் மேலும் கூறினார்.

ஆனால் மருத்துவர்கள் சார்பில் பேசிய முகமட் நாசீர் என்ன மாதிரியான குளறுபடிகள், பலவீனங்கள் இருக்கின்றன என்பதை சுகாதார அமைச்சு பட்டியிலிட்டு காட்ட வேண்டும். மேலும் மலேசிய மருத்துவ மன்றத்தின் மூன்று உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அப்பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் இப்படி எதுவுமே கிரிமியா பல்கலைக்கழக ரத்து விவகாரத்தில்  நடைபெறவில்லை. ஆதலால் அரசாங்கம் கிரிமியா பல்கலைக்கழக ரத்தை மறுபரீசிலினை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சார்பாக முகமட் நாசீர் கேட்டுக் கொண்டார்.