Home நாடு கிரிமியா பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் மீண்டும் அங்கீகரிக்கப்படலாம் – சுப்ரா நம்பிக்கை

கிரிமியா பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் மீண்டும் அங்கீகரிக்கப்படலாம் – சுப்ரா நம்பிக்கை

593
0
SHARE
Ad

DR-SUBRAகோலாலம்பூர், நவ 20 – கிரிமியா பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் மீண்டும் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சோவியத் குடியரசான உக்ரெய்ன் நாட்டில் உள்ளது கிரிமியா மருத்துவப் பல்கலைக்கழகம். இதில் மலேசிய மாணவர்கள் குறிப்பாக இந்திய மாணவர்கள் பலர் கல்வி கற்று வருகின்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு, இப்பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்களை அங்கீகரிக்கப்போவதில்லை என்று மலேசிய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. இதனால் அதில் பயின்று வந்த பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக, மலேசிய இந்தியக் கல்வி உருமாற்றுச் சங்கத்தின் தலைவர் ஏ.இளங்கோவன், கடந்த நவம்பர் 11 ஆம் தேதி டாக்டர் சுப்ரமணியத்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில், மிக விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். கவலை வேண்டாம் என்று சுப்ரமணியம் உறுதிமொழி அளித்ததாகக் கூறப்படுகிறது.