Home கலை உலகம் நடிகை ஸ்ருதி ஹாசன் மீது மும்பையில் மர்ம நபர் தாக்குதல்

நடிகை ஸ்ருதி ஹாசன் மீது மும்பையில் மர்ம நபர் தாக்குதல்

591
0
SHARE
Ad

Shruti-Haas 300-200

மும்பை, நவம்பர் 20- மும்பையில் பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனை மர்ம நபர் தாக்கி விட்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், 27. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு, இந்தி மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். “வெல்கம் பேக்’ என்ற இந்தி படத்திலும், “குர்ராம்’ என்ற தெலுங்கு படத்திலும், தற்போது நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இதனால், அவர் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். நேற்று அவர் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு தன் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென ஸ்ருதியை தாக்கினார். அவரின் கழுத்தை பிடித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி சுதாகரித்து பதிலுக்கு வீட்டின் கதவை அந்த மர்ம நபர் மீது மோதச்செய்தார்.

பீதியடைந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தான். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, ஸ்ருதியின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது, “காவல்நிலையத்தில்  புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. ஸ்ருதி பாதுகாப்பாக உள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளார்’ என அவர் கூறியதாக தெலுங்கு இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.