Home கலை உலகம் மும்பையில் காதலருடன் ஸ்ருதி: திருமணப் பேச்சுவார்த்தையா?

மும்பையில் காதலருடன் ஸ்ருதி: திருமணப் பேச்சுவார்த்தையா?

977
0
SHARE
Ad

shruthihassanமும்பை – நடிகை ஸ்ருதிஹாசன், பிரிட்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலுடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கிறார்.

இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாக அண்மையில் முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மும்பை வந்திருக்கும் மைக்கேலை, காருக்குள் ஸ்ருதி, கட்டியணைத்து வரவேற்று அழைத்துச் சென்ற காட்சியை வட இந்திய கேமரா கண்கள் படம் பிடித்துத் தள்ளியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதனிடையே, 1 வார காலம் இந்தியாவில் தங்கவிருக்கும் மைக்கேல், கமலைச் சந்தித்து திருமண விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

எனினும், ஸ்ருதி தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.