Home கலை உலகம் மலேசியாவில் ‘விஜபி 2’ குழுவினர்!

மலேசியாவில் ‘விஜபி 2’ குழுவினர்!

2079
0
SHARE
Ad

Rosmasoundaryakajolகோலாலம்பூர் – ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படக் குழுவினர் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மஸ்ஜித் இந்தியாவில், ரசிகர்களைச் சந்திக்கவிருக்கின்றனர்.

இதற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் சவுந்தரியா ரஜினிகாந்த், நடிகை கஜோல் ஆகியோர் இன்று மதியம் கோலாலம்பூர் வந்தடைந்தனர்.

இதனையடுத்து, மஸ்ஜித் இந்தியாவில் ஜேக்கெல் வோல்சேல் மால் முன்புறம் தற்போது ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின் ரோஸ்மா மன்சோருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.