Home கலை உலகம் நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா கிரேசி மோகன் மாரடைப்பால் காலமானார்!

நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா கிரேசி மோகன் மாரடைப்பால் காலமானார்!

1428
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரையுலகில் கதை வசனகர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் (66) மாரடைப்புக் காரணமாக இன்று திங்கட்கிழமை காலமானார்.

மேடை நாடகங்களையும் இயக்கியுள்ள அவர் அடிப்படையில் பொறியாளராக இருந்தவர். கமல்ஹாசன் மூலமாகவே திரைக்கு வந்த கிரேசி மோகன், கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜ், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய திரைப்படங்களுக்கு கதை வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இப்படங்கள் அனைத்தும் கமல்ஹாசன் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

எப்போதும், நகைச்சுவையாகவே வசனம் எழுதுவது இவரது சிறப்பம்சம். இவர், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜ், ஆஹா, காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், நான் ஈ, அருணாச்சலம், தெனாலி, சதீலீலாவதி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.