Home அரசியல் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது – தாயிப்

ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது – தாயிப்

385
0
SHARE
Ad

taibகோலாலம்பூர், ஏப்ரல் 4 – சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்துடன் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் மறுத்துள்ளார்.

இது பற்றி தாயிப் கூறுகையில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை என்ற பெயரில் தனக்கு மிகுந்த துன்பங்களைத் தருவதாகவும், இனி அந்த நேர்மையற்ற ஆணையத்தின் விசாரணைகளுக்கு தான் ஒத்துழைப்பு தரப்போவதில்லை என்றும், இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய முன்னணி அரசின் தலைமைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த ஊழல் விசாரணை, எதிர் வரும் போதுத்தேர்தலில் தேசிய முன்னணி அரசை பாதிக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தன்னால் எந்த வகையிலும் தேசிய முன்னணி அரசுக்கு பாதிப்பு இல்லை என்றும், கடந்த தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளதாகவும், எனவே மக்கள் எப்போதும் தனக்கு ஆதவரவாக இருப்பார்கள் என்றும் தாயிப் கூறினார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், தாயிப் மாஹ்முட்டின் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு சிலரிடம் இரண்டு வழக்கறிஞர்கள் வெட்டுமர அனுமதிக்காக பேச்சுவார்த்தை நடத்தும் ஒளிநாடா (வீடியோ) வெளியிடப்பட்டு, மலேசிய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.