நியூசிலாந்து, ஜன.22- நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளன.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 150க்கும் அதிகமான ஹெக்டேர் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது.
இதனால் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதுடன், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில், ஹெலிகாப்டர்கள் மற்றும் 20 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காட்டுத் தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 185 பேர் உயிரிழந்தனர், அதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை மிக மோசமான இயற்கை சீற்றமாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.