Home 13வது பொதுத் தேர்தல் லெம்பா பந்தாய் தொகுதியில் தேசிய முன்னணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு – முகைதீன் ஆருடம்

லெம்பா பந்தாய் தொகுதியில் தேசிய முன்னணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு – முகைதீன் ஆருடம்

524
0
SHARE
Ad

PTJ00_160108_ASAS TAN1கோலாலம்பூர், ஏப்ரல் 6 – எதிர்வரும் பொதுத்தேர்தலில், கூட்டரசுப் பிரதேசத்தின், லெம்பா பந்தாய் தொகுதியை பிகேஆரிடமிருந்து மீண்டும் கைப்பற்ற தேசிய முன்னணிக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக துணைப் பிரதமர் மொய்தீன் யாசின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், லெம்பா பந்தாய் தொகுதியில் பிகேஆர் சார்பாக போட்டியிட்ட, பிகேஆர் உதவித் தலைவரும், அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இசா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அம்னோ வேட்பாளரான டத்தோஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலிலை விட 2,895 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இது பற்றி மொய்தீன் யாசின் கூறுகையில், “கூட்டரசுப் பிரதேசத்தின் லெம்பா பந்தாய் தொகுதியின் தேசிய முன்னணித் தலைவரும், நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சருமான டத்தோ ராஜா நோங் சிக் ராஜா சைனல் அபிதீன், தனது தொகுதியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளார், அதை மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே வரும் பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றுவது உறுதி” என்று முகைதீன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், அன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலேயே போட்டியிட முடிவெடுத்திருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“அன்வார் தம்பூன் தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக பலமான ஒரு போட்டியை அங்கு உருவாக்குவோம் என்பது அவருக்கு தெரியும். அதனால் தான் தனது முடிவில் இருந்து அன்வார் பின்வாங்கிவிட்டார். ஆனால் பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்கள், தங்களது தொகுதியில் என்ன விதமான வளர்ச்சியை அன்வார் செய்துள்ளார் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஆதரவு தரவேண்டும்” என்று மொய்தீன்  தெரிவித்துள்ளார்.