Home உலகம் சவுதி அரேபியாவில் நாய் கூண்டில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் இலங்கைப் பணிப்பெண்கள்

சவுதி அரேபியாவில் நாய் கூண்டில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் இலங்கைப் பணிப்பெண்கள்

545
0
SHARE
Ad

imagesசவுதி அரேபியா, ஏப்.8-சவுதி அரேபியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதாகத் எனும் புதிய சட்டத்தினால், லட்சக்கணக்கான வெளி நாட்டவர்கள் அங்கு வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
சவுதி அரேபிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்க இச்சட்டம் வகை செய்கிறது.
இதனால், இதுவரை 2 இலட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், 6 லட்சம் சவுதி குடிமக்கள் தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள இந்தக் கட்டடத் தொகுதியில் பணிப் பெண்ணாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்க மறுப்பு வெளியிட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பணிப்பெண்களை நாய்களை அடைக்கும் கூண்டில் அடைத்து வைத்துளது சவுதி காவல்துறை. சொந்த நாட்டையே கொள்ளையிடும் மகிந்த அரச கும்பல் சவூதி அரேபியாவில் அவலத்துள்  வாழும் ஏழைப் பெண்கள் குறித்து துயர் கொண்டதாகத் தெரியவில்லை.