இந்த ஆண்டு அக்டோபர் 24 முதல் நவம்பர் 28 வரை உலகிலேயே அதிக புள்ளிகளைப் பெற்ற அணியாகவும் மலேசியா திகழ்கிறது.
நவம்பர் 14-ஆம் தேதி தாய்லாந்தையும், நவம்பர் 19-ஆம் தேதி இந்தோனிசியாவையும் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதன் பின்னர் உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் மலேசியா சிறந்த செயல்திறனைக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைமை பயிற்சியாளர் டான் செங் ஹோவின் வழிகாட்டுதலின் கீழ், நவம்பர் 9-ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடந்த நட்பு ஆட்டத்தில் தஜிகிஸ்தானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பின்னர் ஹாரிமாவ் மலாயா அணி உலக தரவரிசையில் 3.24 புள்ளியைச் சேர்த்தது.
தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் அணிகளான, பெல்ஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.