Home One Line P1 சீன, தமிழ் பள்ளிகளில் ஜாவி வனப்பெழுத்து போதிக்கலாம், நீதிமன்றம் தீர்ப்பு!

சீன, தமிழ் பள்ளிகளில் ஜாவி வனப்பெழுத்து போதிக்கலாம், நீதிமன்றம் தீர்ப்பு!

1015
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: நாடு முழுவதும் உள்ள சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் ஜாவி வனப்பெழுத்து பாடம் கற்பிக்கப்படக்கூடாது  எனும் கெராக்கான் கட்சியின் கோரிக்கையை பினாங்கு உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை நிராகரித்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி அமர்ஜித் செர்ஜித் சிங் தனது முடிவில், ஜாவி வனப்பெழுத்து மலாய் மொழியில் ஒரு பகுதியாகும் என்றும், மலாய் மொழி தேசிய மொழியாகும் என்றும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஜாவி வனப்பெழுத்து வகுப்பை அமல்படுத்துவது தேசிய மொழிச் சட்டம் 1963/ 1967 மற்றும் மத்திய அரசியலமைப்பின் விதிகள் ஆகியவற்றுடன் முரண்படவில்லை என்று அவர் கூறினார்.

கடந்த செப்டம்பரில், கெராக்கான் கட்சி மத்திய அரசுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்தது. அதன் தலைவர் டொமினிக் லாவ் மூலம் இந்த வழக்கை கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், துணை அமைச்சர் தியோ நீ சிங் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்தது.

கெராக்கானை டான் லீ கியாட் மற்றும் மாக் கா கியோங் என இரு வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

நேற்று வியாழக்கிழமை இங்கு தொடர்பு கொண்டபோது, ​​கெராக்கான் மத்தியக் குழு கூடி இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா என்பதை கெராக்கான் தீர்மானிக்கும் என்று மாக் குறிப்பிட்டிருந்தார்.