Home One Line P1 கிளந்தான் வெள்ளம்: ஏழு வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்!

கிளந்தான் வெள்ளம்: ஏழு வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்!

641
0
SHARE
Ad

கோத்தா பாரு: கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று திங்கட்கிழமை காலை 7.00 மணி நிலவரப்படி 1,621 குடும்பங்களிலிருந்து 5,636 பேராக உயர்ந்துள்ளது.

ஜேகேஎம் பேரிடர் தகவல் மையத்தின் அறிக்கைபடி, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையிலும் பாசிர் மாஸ் பகுதியில் அதிகமானோர் அதாவது 2,390 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பாசிர் மாஸில் மொத்தம் 18 தற்காலிக நிவாரண மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) வலைத்தளத்தில் உள்ள தகவலின்படி,  கோலோக் ஆற்றின் அளவு 9 மீட்டர் ஆபத்து மட்டத்திற்கு அப்பால் 10.44 மீட்டராக உயர்ந்து வருவதைக் காட்டுகிறது. பிற முக்கிய ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பெல்க்ரா தெராதாக் பத்து என்ற இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீரில் மூழ்கியதாக அஞ்சப்பட்ட ஏழு வயது சிறுவன், பாசிர் புத்தேயில் இன்று திங்கட்கிழமை காலை இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இன்று காலை 8.00 மணியளவில் பாதிக்கப்பட்டவர், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ஓர் அணையில் முகமட் இல்ஹாம் ஹஸ்மடியின் சடலத்தை மீட்புக் குழு கண்டுபிடித்ததாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹசனுடின் ஹசான் தெரிவித்தார்.