Home One Line P1 “அன்வார் குறித்த எனது சத்தியப் பிரமாணத்தை விசாரியுங்கள்” யூசுப் ராவுத்தர் காவல் துறையில் புகார்

“அன்வார் குறித்த எனது சத்தியப் பிரமாணத்தை விசாரியுங்கள்” யூசுப் ராவுத்தர் காவல் துறையில் புகார்

843
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பாலியல் புகார் கூறியிருக்கும் அவரது முன்னாள் உதவியாளரான முகமட் யூசோப் ராவுத்தர், இதன் தொடர்பில் தான் செய்திருக்கும் சத்தியப் பிரமாணத்தில் கண்டுள்ள தகவல்களை விசாரிக்க வேண்டும் என நேற்று சனிக்கிழமை தலைநகர் செந்துல் காவல் நிலையத்தின் புகார் ஒன்றைச் செய்திருக்கிறார்.

இந்தப் புகார் கிடைக்கப்பட்டதை செந்துல் காவல் நிலையத்தின் தலைவர் எஸ்.சண்முகமூர்த்தியும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவு தன்வசம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் சண்முக மூர்த்தி மேலும் தெரிவித்தார்.

அன்வார் கடந்த 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி சிகாம்புட்டில் உள்ள அவரது இல்லத்தில் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்த ஆண்டு நவம்பர் 19 தேதியிட்ட சத்தியப் பிரமாணத்தின் வழி தெரிவித்திருக்கும் யூசுப் ராவுத்தர் அந்த சத்தியப் பிரமாணத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாகவும் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

யூசுப் ராவுத்தரின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் அன்வார் இப்ராகிம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் தான் மனம் தளர்ந்து விடப் போவதில்லை என்றும் மாறாக, மேலும் துடிப்புடன் அரசியலில் செயல்படத் தனக்கு மேலும் உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்