Home One Line P2 சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ படத்தின் இரண்டாவது தோற்றம் வெளியீடு!

சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ படத்தின் இரண்டாவது தோற்றம் வெளியீடு!

712
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும்சூரரைப் போற்றுதிரைப்படத்தின் இரண்டாவது தோற்றம் வெளியாகி தற்போது பரவலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்து வெளியான ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் பெரும் அளவில் பேசப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்தியாவின் முதல் குறைந்த செலவிலான விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் முன்னோட்டக் காணொளி ஜனவரி 7-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.