Home அரசியல் ம.இ.கா உட்கட்சித் தேர்தல்கள் பொதுத் தேர்தலுக்குப் பின் ஒத்தி வைப்பு

ம.இ.கா உட்கட்சித் தேர்தல்கள் பொதுத் தேர்தலுக்குப் பின் ஒத்தி வைப்பு

794
0
SHARE
Ad

Murugesan-Sliderகோலாலம்பூர், ஜனவரி 22 – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, ம.இ.காவின் கிளை, தொகுதி, மற்றும் மத்திய அளவிலான உட்கட்சித் தேர்தல்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக ம.இ.கா. தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் அறிவித்துள்ளார்.

ம..இ.கா கிளைகளுக்கு வழங்கப்படும் ‘பி’ பாரம் எனப்படும் சான்றிதழும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே வழங்கப்படும் என்றும் முருகேசன் தெரிவித்துள்ளார்.

13வது பொதுத் தேர்தலுக்கு ம.இ.காவினர் முழுமையான அளவில் தயாராக வேண்டும் என்ற நோக்கில் இந்த உட்கட்சித் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இதற்குரிய முடிவு கடந்த ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.