Home One Line P2 ரஜினி கட்சி ஏப்ரல் 14-இல் தொடக்கம் – ரஜினி கூட்டணியில் பாமக இணைகிறது

ரஜினி கட்சி ஏப்ரல் 14-இல் தொடக்கம் – ரஜினி கூட்டணியில் பாமக இணைகிறது

566
0
SHARE
Ad

சென்னை – தொடங்குவாரா, மாட்டாரா, எப்போது தொடங்குவார் என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ரஜினியின் புதிய கட்சி எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 14-இல் தொடக்கம் காணும் என ரஜினிகாந்தின் நெருங்கிய அரசியல் சகாவான தமிழருவி மணியன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி கட்சியின் பிரம்மாண்டமான மாநாடு நடைபெறும் என்றும் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த விவரங்களைத் தெரிவித்திருக்கும் தமிழருவி மணியன் கூடுதலாக இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ரஜினிகாந்த் அமைக்கவிருக்கும் கூட்டணியில் பாமக கட்சி இணையும் என்றும் தமிழருவி மணியன் தமிழக அரசியலைக் கலக்கவிருக்கும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதா இல்லையா என்பதை ரஜினியே முடிவெடுப்பார் என்றும் தெரிவித்த தமிழருவி மணியன் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். காரணம், அவ்வாறு டிடிவி தினகரன் கூட்டணி அமைத்தால் அதன் காரணமாக வாக்குகளை இழக்கக் கூடும் என அவர் அஞ்சுகிறார் என்றும் தமிழருவி மணியன் கூறியிருக்கிறார்.