Home கலை உலகம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷூக்கு வில்லனாக பிரசன்னா

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷூக்கு வில்லனாக பிரசன்னா

824
0
SHARE
Ad

சென்னை – அண்மையில் அறிமுகமான இளம் இயக்குநர்களில் தமிழ்த் திரையுலகையும், முன்னணி கதாநாயக நடிகர்களையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன் (படம்).

தனது முதல் படமாக “துருவங்கள் 16” படத்தில் முன்னணி கதாநாயகன் அல்லாத ரகுமானை நாயகப் பாத்திரத்தில் வைத்து திரில்லர் எனப்படும் மர்மமும் திகிலும் கலந்த படத்தை வழங்கி வெற்றியடைந்தார் கார்த்திக் நரேன்.

அடுத்து இவர் எடுத்த “நரகாசுரன்” என்ற படத்தில் அரவிந்த் சுவாமி கதாநாயகனாக நடித்தும் சில சிக்கல்களால் அந்தப் படம் இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

அடுத்து அருண் விஜய்யை வைத்து கார்த்திக் நரேன் எடுத்திருக்கும் “மாபியா” என்ற படம் அடுத்த வாரம் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பிரசன்னாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதனை அடுத்து தனுஷின் 43-வது படத்தை இயக்கும் பொறுப்பும் கார்த்திக் நரேனின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. “டி-43” எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் பிரசன்னாவும் இணைவதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.