இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை அறிமுகப்படுத்தி பயனர்களுக்கு பன்முனைகளிலும் பல வசதிகளை ஏற்படுத்தித் தந்த கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மற்றொரு புரட்சி “கூகுள் மேப்ஸ்” எனப்படும் வரைபடம் தொடர்பானத் தகவல்களை வழங்கும் செயலி.
கூகுள் மேப்ஸ் தற்போது 15 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து இன்றும் கோடிக்கணக்கான பயனர்களை ஈர்த்துள்ளது. 15-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் கூகுள் மேப்ஸ் மேலும் பல புதிய தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் சில அம்சங்களை இங்கே வழங்குகிறோம்:
- “வழங்குங்கள்” என்ற பொருளிலான contribute என்ற தலைப்பிலான புதிய தொழில்நுட்ப அம்சத்தின்படி இனி கூகுள் மேப்ஸ் செயலியின் வழி பயனர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை உள்ளூர் சாலைகள், அங்குள்ள முக்கிய இடங்கள், புகைப்படங்கள், போன்ற தகவல்களை வழங்கி பகிர்ந்து கொள்ளலாம்.
- போக்குவரத்து என்ற பொருளிலான “Commute” என்ற புதிய அம்சத்தின் வழி ஓர் ஊரில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படிச் செல்லலாம் என்பது போன்ற தகவல்களை பயனர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
- அதேபோல, ஒவ்வொரு ஊரிலும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களையும் கூகுள் மேப்ஸ் இனி எடுத்துக் காட்டும்.