Home நாடு கூகுள் தரவு மையம் : 2030-க்குள் 26,500 வேலை வாய்ப்புகள்!

கூகுள் தரவு மையம் : 2030-க்குள் 26,500 வேலை வாய்ப்புகள்!

212
0
SHARE
Ad

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் 2 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் கூகுள் தரவு மையத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலீடு, வணிகம் தொழில் துறை அமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிசும் கலந்து கொண்டார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எல்மினா பிசினஸ் பார்க் என்ற இடத்தில் கூகுள் தரவு மையம் அமைகிறது.

#TamilSchoolmychoice

இந்தத் தரவு மையம் அதிகரித்து வரும் கூகுள் கிளவுட் தேவைகளுக்கான வசதிகளையும், செயற்கை நுண்ணறிவு புத்தாக்கங்களையும் கொண்டிருக்கும். மேலும் பல இலக்கவியல் (டிஜிடல்) வசதிகளையும் இந்தத் தரவு மையம் கொண்டிருக்கும்.

பொருளாதார ரீதியாக 3.2 பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் மதிப்புடை தாக்கங்களை இந்த மையம் ஏற்படுத்தும். 2030-ஆம் ஆண்டுக்குள் 26,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.