Home உலகம் ஜிம்மி கார்ட்டர் : 100 வயதைக் கொண்டாடும் முதல் அமெரிக்க அதிபர்!

ஜிம்மி கார்ட்டர் : 100 வயதைக் கொண்டாடும் முதல் அமெரிக்க அதிபர்!

147
0
SHARE
Ad
ஜிம்மி கார்ட்டர்

வாஷிங்டன் : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று அக்டோபர் 1 ஆம் தேதி, தனது பிறந்தநாளன்று, புதிய சாதனையை நிகழ்த்துகிறார். 100 வயதை எட்டும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக திகழ்கிறார்.

ஒரே ஒரு தவணை அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றவர் ஜிம்மி கார்ட்டர். நிலக்கடலை விவசாயியாக அமெரிக்க தேர்தல் களத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் அவர்.

கார்ட்டரின் அதிபருக்குப் பதவிக்குப் பிந்தைய வாழ்க்கை 1981இல் தொடங்கியது, அவர் இரண்டாவது தவணைக்கான தேர்தலில் தோல்வியடைந்தபோது அவருக்கு அப்போது வயது 56 வயதுதான்!

#TamilSchoolmychoice

கார்ட்டர் தனது அதிபர் பதவிக்குப் பிந்தைய வாழ்க்கையை பெருநிறுவன வாரியங்களில் அமர்ந்து பேச்சுக் கட்டணங்களைப் பெறுவதில் அர்ப்பணிக்கவில்லை. இதைத்தான் அண்மையக் காலங்களில் ஓய்வு பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

கார்ட்டர் வீடுகள் கட்டுவதில் தனது கைகளை அழுக்காக்கினார், கியூபா மற்றும் மத்திய கிழக்கிற்கு அமைதி பணிகளை மேற்கொண்டார், பிணைக் கைதிகளின் விடுதலைக்காக பேரம் பேசினார். தனது சொந்த ஊரில் வாழ்ந்தார். ஞாயிற்றுக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளை நடத்தினார், புத்தகங்களை எழுதினார், மற்றும் கிராமி விருதுகளை வென்றார்.

அவர் பதவி விலகி கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் கடந்து விட்டது. பல சேவை முன்னெடுப்புகளை அவர் முன்னெடுத்தார்.

2002-இல் அவர் நோபல் அமைதிப் பரிசு பெற்று 22 ஆண்டுகள் ஆகிவிட்டன, அப்போது அமெரிக்கா ஈராக்கில் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த ஆண்டு கார்ட்டர் கியூபாவுக்கும் ஒரு முக்கிய வருகை மேற்கொண்டார்.

தனக்கு மூளைப் புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், அதிக நாட்கள் உயிர் வாழ முடியாமல் போகலாம் என்றும் கார்ட்டர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.

“நான் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன்” என்று கூறுகிறார்  கார்ட்டர்.

2015 டிசம்பரில், சிகிச்சைக்குப் பிறகு, தன்னைத் தாக்கிய புற்றுநோய் போய்விட்டது என்று கார்ட்டர் அறிவித்தார். சிஎன்என் (CNN) தொலைக்காட்சி ஊடகத்தின் ஆராய்ச்சி நூலகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்று குறித்த பல குறிப்பிடத்தக்க பதிவுகள் உள்ளன.

“ஒரு முழுமையான வாழ்க்கை: தொண்ணூறில் பிரதிபலிப்புகள்” என்ற சுயசரிதையை கார்ட்டர் வெளியிட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆடியோ புத்தகத்திற்காக அவர் கிராமி விருதை இரண்டு முறை வென்றார்.

2019-ஆம் ஆண்டு அவர் மூன்றாவது கிராமி விருதை வென்றார்.

கார்டர் ஹாஸ்பிஸ் பராமரிப்பில் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவரது மனைவி ரோசலின் இறந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர்கள் 1946இல் திருமணம் செய்து கொண்டனர்.