Home உலகம் இஸ்ரேல் மீது ‘ஏவுகணை’ மழை பொழிந்த ஈரான்! பதிலடிக்குத் தயாராகும் நெதன்யாகு!

இஸ்ரேல் மீது ‘ஏவுகணை’ மழை பொழிந்த ஈரான்! பதிலடிக்குத் தயாராகும் நெதன்யாகு!

240
0
SHARE
Ad
இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு

டெல்அவிவ் : இஸ்ரேலின் முக்கிய இராணுவப் பகுதிகள் மீது ஈரான் நேற்று நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. சுமார் 180 ஏவகணைகள் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

அவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி முறியடித்தது. எனினும் ஓர் இராணுவ விமானப் படைத் தளம் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஈரானிய இராணுவமும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.

இதற்கிடையில் ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு.

#TamilSchoolmychoice

தென் லெபனான் வட்டாரத்தில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்கள் நடத்தி அங்கு செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத மையங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது.

இந்த அண்மையத் தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் விரிவடையத் தொடங்கியிருக்கிறது.